என் முதல் மனிதி

என் உயிராய் .........என் உணர்வாய்........... 
என் வலியாய்......... என் வேதனையாய்.........
என் கனவாய்......... என் சுவாசமாய்........
என் நினைப்பாய்....... என்றும் என்னுள் நிலைப்பாள்......
என் கண் விழித்தவுடன் நான் கண்ட என் முதல் காதல் 
இன்னும் நூறாய் மாற இன்றும் ...
உன் மடி தரும் சுகம்,
ஆயிரம் மரத்தடி நிழலும், 
ஆயிரம் அருவியின் அடி குளிர்ச்சியும், 
ஒரு உழவு மழை ஆனந்தமும்,
உயர் மழையின் முடியும்,
பொன் படுக்கை தூக்கமும்,
நான் மலர்ப்படுக்கை செல்லும்வரை. 
கேட்டு பட்டா போட்டுக் கொண்ட இடம்.....
உன் மாளிகையான சமயலறையில்
பின்னிருந்து உன்னை கட்டி அணைத்த அந்த வேலையும் 
எனக்காக நீ சிந்திய கண்ணீர் துளியும் ஒரு நாளும்
என்னுடன் பிரியாமல் வரம் வேண்டும்....
இந்த கருவண்டையும் மயிலாய் பார்த்த 
என் முதல் மனிதி .....
வாழ்நாளில் இனிகிடைக்கப் பெற ஓர் அற்புத 
பொக்கிஷம் என்றும்என் இதய அறையில்......................
என் அம்மா💓


உன்னை நேசித்ததால்
           நான்


Comments

  1. Free Spins - Lucky Club Live Casino
    Lucky Club. This offer is not exclusive to the players at the casino. To claim the free spins, you must register for the account through luckyclub the casino link. No code required

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ரசிகன்❤️

செப்டம்பர் 7