உன்னுடன் ஒரு நாள்

ஊர் அடங்கிய இந்த பூலோக மாலைவேளையில் 
மின்மினிப் பூச்சிகளும்  விளக்காய் மாறும்....
வெப்பம் தணிந்து நிலவு குளிரூட்ட தொடங்கும்
தென்றலும் இதமாய் மாறும்......
வாகனம் ஓசை அடங்கி வண்டுகளின் ஓசை தொடங்கும்....

நீண்ட தூர ஒற்றையடிப் பாதை
காற்றில் மரங்கள் மோதும் சத்தம்
இலைகள் மெதுவாக தரை வந்தடையும் நேரம்
தூரத்தில் தெரியும் விளக்கொளியை நோக்கி
நீயும் நானும்.........

உன் அழகான குட்டி விரலை என் கைகலால் பிடித்து மெதுவாக நடந்து இயற்கையுடனும் உன்னுடனும் பேசிடும் அந்த வேலையில்
உன் ஒற்றை கூந்தல் காற்றில் உன் கண்களை மறைக்கும்💓💓
அதை விளக்கியவாறு என்னை பார்க்கும் அந்த நொடி......
அந்த வெள்ளி நிலவும் வெட்கத்தில் கண்களை மூடும்

சிறிய நடை பயணத்திற்குப் பிறகு அழகான புல்வெளியில் பணி முத்துக்களோடு அமைதியாக அமர்ந்து உன் கண்களை மட்டுமே 
பார்த்துக் கொண்டிருக்கும் அந்த வேளையில்

கருத்துரையாளர்கள் காதலுடன் தொடங்கும்...........

உன் பேச்சும் உன் சிரிப்பும் அதை ரசிக்கும் என் கண்கள் இதை கவனித்த அந்த கூவையும் தனக்கு ஒரு துணை இல்லையே என எண்ணி 90 டிகிரி கோணங்கள் தலையைத் திருப்பிக்கொண்டு பொறாமையில்.......

இரவு உணவு அருந்தும் நேரம் உனக்கென படைக்கப்பட்ட
அந்த உணவை உன் விரலால் கூப்பி எடுத்து நீ அருந்தும்
அழகில் நடந்து வந்த கலைப்பும் எடுக்க தூண்டிய பசியும் 
காணாமல் போனது காற்றில்
பிறகு திரும்பும் பொழுது உன் விரலை விட நேரிடும் என்று 
எண்ணும் பொழுது என் இதயத்தில் தோன்றிய எண்ணங்கள் 
,தடுமாற்றங்கள், தயக்கங்கள், தாபங்கள்....
 விட்டுவிடக்கூடாது என்பதற்காக  இத்தோடு முடிக்கிறேன் இல்லையென்றால் உன் விரலை விட்டு விட்டேன் 
என்று எழுத நேரிடும்.....

உன்னை நேசித்ததால்
             நான்

Comments

Popular posts from this blog

ரசிகன்❤️

என் முதல் மனிதி

செப்டம்பர் 7