Posts

Featured Post

கண்ணீர்

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று நான் நினைத்தேன் வந்தாய் நீ............! நடந்தது ஒன்று வந்தாய் நீ............! எதிர்பார்த்தேன், ஏக்கம் கொண்டேன், இழந்தேன்!  இருந்தாய் நீ !!! தனிமை,வெறுமை,வெறுப்பு !    இருந்தாய் நீ!!! வியப்பு ,மகிழ்ச்சி, கூடல் !   இருந்தாய் நீ!!! பிறப்பு,இறப்பு,இழப்பு !   இருந்தாய் நீ!!! காதல், துக்கம்,காற்று,மழை !  இருந்தாய் நீ!!! வெற்றி,தோல்வி,கோபம்!!   இருந்தாய் நீ!!!! அவமானம், பாரம், வலி  இருந்தாய் நீ!!! சிலரிடம் நீ வடிந்தது கண்டு , நான் வடித்தேன்!!!!!! களிப்பில் வடிந்தாய் உன்மேல்  ஆசை கொண்டேண். கலங்கியதால் வடிந்தாய் உன்மேல்  வெறுப்பு கொண்டேண். ஏமாறும் போதும் வந்தாய் ,ஏமாற்றும் போதும் வந்தாய்!!! உன்னிடம் மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன் சுற்றி இருப்பவர்களின் கண்ணில்.....   ஒரு  நாளும் பார்த்துவிட கூடாது உன்னை கலங்கிய நிலையில்😭😢               அழுததனால் நான்                   கா.ராஜ சேகர்

ரசிகன்❤️

என் வெண்ணிலவே இன்று வானில் தோன்றிய நிலவும் உன்னை நினைவுற செய்தது ..... இந்த இரவில் தூரமாய் தெரிந்த இடி மின்னலின் மின்னொளியின் பின்புறம் தெரிந்த மேகத்தின் நிழழும்  நீ தான் என கவிதை பாடிக்கொண்டும் இருந்தேன் என் நண்பனிடம்.......😍 தேர்வை முடித்து மணி சத்ததிற்கு காத்திருந்த வேலையில் அங்கு இருந்த ஒற்றை ஈ யிடம் உன்னழகை வருனித்திக்கொண்டிருந்தேன்......❤️ தென்றல் பேசும் வார்த்தைகளுக்கு மொழி இல்லை , உணர்ந்தால் மட்டுமே புரியும் கூற வரும் கதை........ பேசத்தொடங்கிய மழளையின் தடுமாற்றமே உன்னிடம் பேசவேண்டும் என்ற ஆசை ஆனால் பேசுவதில் பயம்😒 மயிலிறகு குட்டியிடும் என்று புத்தகத்தில் வைத்து தினமும் திறந்து பார்க்கும் குழந்தையின் சிந்தனையே உன் குறுஞ்செய்திகளை திறந்து பார்க்கும் வேலையில்.......😍 காரணமற்ற என் சிரிப்புக்கு காரணமானவள்...... காரணம் தெரியாமல் தொடங்கிய பேச்சுவார்த்தைகள் காரணம் இல்லாமல் கவிதையாக மாறியது இந்த கவிஞனின் புத்திக்கு.... கூர் கொண்ட உன் புருவம் கீரி கலைந்த என் சோகங்கள்..... உன் நினைப்பில் சந்தோசத்தை தந்தது........ விழி இரண்டும் நான் மட்டுமே பார்த்த மாய திரைகள் உன

எல்லாம் அவன்

நான் சிக்கித் தவித்து திணறிய பல நேரங்கள் எந்த ஒருவனால் என்னை உருவாக்க முடியுமோ..... எந்த ஒருவனால் என்னை ஊக்கப் படுத்த முடியுமோ..... எந்த ஒருவனால் என்னை சரிசெய்ய முடியுமோ.... எந்த ஒருவனால் என்னை சமாதானம் செய்ய முடியுமோ..... அந்த ஒருவன் மீண்டும் என் வாழ்வில் தட்டிக்கொடுத்து நடக்க வைத்தான்........ இந்த விளக்கு அணையும் போதெல்லாம் தீக்குச்சியாய் மாறி அவன் மீண்டும் வெளிச்சம் தந்தான்.. அளவு கடந்த கோபம் அவன் மீது .... அளவு கடந்த பாசம் அவன் மீது....... அளவுகடந்த காதல் அவன் மீது ...... என் காதலை வெளிப்படுத்த தெரியாத காரணமே அவன்மீது கொண்ட கோபம்..... என் கண் பார்த்த கடவுளே என்னை கல்லை வணங்க சொல்கிறது என் கல்லும் அவனே என் கடவுளும் அவனே... வலியை மறந்து சுமையை மறந்து பல நாட்கள் புன்னகையுடன் தோன்றிருக்கிறான் எங்கள் முன்னர் எங்களுக்காக அவன் எடுத்த ஓட்டம் இன்னும் நிற்கவில்லை.. உங்களுக்காகத்தான் என்று அவன் கூறும் போதெல்லாம் என் மனம் நிலைகுலையும்..... எத்தனையோ ஆண் கடவுள்களை வணங்கி இருக்கலாம் அவர்கள் எல்லாம் ஒருசேர அவனே எந்தன் அப்பன் அவன் ....... அவன் அணியும் சட்டை பொத்தானும் அ

கூடு சேர்ந்த பறவைகள்❤

கரை வந்த பிறகுதான் புரியும் கடலின் அருமை  முடிவில்லா முடிவு வந்தவுடன் தான் புரிய ஆரம்பிக்கின்றன சில மனிதர்கள் (நண்பர்கள்)....  எதற்கு என்று ஆரம்பித்த ஒன்று.....  எதற்கு என்பது தெரிய வைத்தது கடைசி சில நிமிடங்கள் பசுமை போர்திய காட்டிற்குள் பாடலும் பாசமும்.....  நேற்று என்பது நினைக்க வைக்கிறது,  இந்த நொடி.......  மறக்க முடியாத நடனங்களும் பார்க்க முடியாத இரவுகளும்💓 கெடுக்கப்பட்ட தூக்கத்திற்கு கொடுக்கப்பட்ட விலை  சிரிப்பும், அன்பும், காதலும்,........ முடிந்தது என்று கட்டித் தழுவி நண்பர்கள் .... சிரிப்பிற்கு பஞ்சமில்ல நான்கு நாட்கள்......  கர்நாடகா ஆற்றுநீர் பிரதிபலித்தது பலரின் உண்மையான முகங்களை....👪 மறுக்கப்படாத நேசமும்.... மறைக்கப்படாத அக்கறையும்.... கொடுக்கப்படாத காதலும் என்றுமே நெஞ்சில் மிச்சம் வெட்டிக் கொண்டாடிய கடைசி நொடியில்  வென்றது காலம்......................😔 திரும்பக் கிடைக்கப் போவதில்லை என்று . பறவையின் குணமே பறப்பதுதான் பறந்த பறவைகள் நாம் கூடு என்றும் கலைய போவதில்லை, நினைவாக நெஞ்சில் பத்திரமாய்💓 எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு குறை........  வகுப்பற

என் முதல் மனிதி

என் உயிராய் .........என் உணர்வாய்...........  என் வலியாய்......... என் வேதனையாய்......... என் கனவாய்......... என் சுவாசமாய்........ என் நினைப்பாய்....... என்றும் என்னுள் நிலைப்பாள்...... என் கண் விழித்தவுடன் நான் கண்ட என் முதல் காதல்  இன்னும் நூறாய் மாற இன்றும் ... உன் மடி தரும் சுகம், ஆயிரம் மரத்தடி நிழலும்,  ஆயிரம் அருவியின் அடி குளிர்ச்சியும்,  ஒரு உழவு மழை ஆனந்தமும், உயர் மழையின் முடியும், பொன் படுக்கை தூக்கமும், நான் மலர்ப்படுக்கை செல்லும்வரை.  கேட்டு பட்டா போட்டுக் கொண்ட இடம்..... உன் மாளிகையான சமயலறையில் பின்னிருந்து உன்னை கட்டி அணைத்த அந்த வேலையும்  எனக்காக நீ சிந்திய கண்ணீர் துளியும் ஒரு நாளும் என்னுடன் பிரியாமல் வரம் வேண்டும்.... இந்த கருவண்டையும் மயிலாய் பார்த்த  என் முதல் மனிதி ..... வாழ்நாளில் இனி கிடைக்கப் பெற ஓர் அற்புத  பொக்கிஷம்  என்றும்என் இதய அறையில்...................... என் அம்மா💓 உன்னை நேசித்ததால்            நான்

உன்னுடன் ஒரு நாள்

ஊர் அடங்கிய இந்த பூலோக மாலைவேளையில்  மின்மினிப் பூச்சிகளும்  விளக்காய் மாறும்.... வெப்பம் தணிந்து நிலவு குளிரூட்ட தொடங்கும் தென்றலும் இதமாய் மாறும்...... வாகனம் ஓசை அடங்கி வண்டுகளின் ஓசை தொடங்கும்.... நீண்ட தூர ஒற்றையடிப் பாதை காற்றில் மரங்கள் மோதும் சத்தம் இலைகள் மெதுவாக தரை வந்தடையும் நேரம் தூரத்தில் தெரியும் விளக்கொளியை நோக்கி நீயும் நானும்......... உன் அழகான குட்டி விரலை என் கைகலால் பிடித்து மெதுவாக நடந்து இயற்கையுடனும் உன்னுடனும் பேசிடும் அந்த வேலையில் உன் ஒற்றை கூந்தல் காற்றில் உன் கண்களை மறைக்கும்💓💓 அதை விளக்கியவாறு என்னை பார்க்கும் அந்த நொடி...... அந்த வெள்ளி நிலவும் வெட்கத்தில் கண்களை மூடும் சிறிய நடை பயணத்திற்குப் பிறகு அழகான புல்வெளியில் பணி முத்துக்களோடு அமைதியாக அமர்ந்து உன் கண்களை மட்டுமே  பார்த்துக் கொண்டிருக்கும் அந்த வேளையில் கருத்துரையாளர்கள் காதலுடன் தொடங்கும்........... உன் பேச்சும் உன் சிரிப்பும் அதை ரசிக்கும் என் கண்கள் இதை கவனித்த அந்த கூவையும் தனக்கு ஒரு துணை இல்லையே என எண்ணி 90 டிகிரி கோணங்கள் தலையைத் திருப்பிக்கொண்டு பொறாமையில்.......

நான் வேண்டிய வாழ்வு - 2

முடியாத பட்சத்தில்................ சுயநலம் மறந்த தந்தை போதும்.... உலகை மறந்த தாய்  போதும்......... துரோகம் மறந்த நட்பு போதும்....... ஓய்வு மறந்த இசை போதும்....... வேர்வை மறக்காத  உணவு போதும்..... சொந்தம் மறந்த தண்ணீர் போதும்..... உண்மை மாறாத காதல் போதும்..... குளிர் மறக்காத நிலவு போதும்....... ஒளி மங்காத கதிரவன் போதும்...... மனம் மறக்காத மலர் போதும்..... நன்றி மறக்காத நாய் போதும்..... விஷம் குறையாத  பாம்பு போதும்....,. வெட்ட தெரியாத ஆயுதம் போதும்..... மயக்க தெரியாத கண்கள் போதும்..... மறைக்க தெரியாத உள்ளம் போதும்..... இலக்கணம் குறையாத எழுத்து போதும்..... விட்டு பிரியாத உறவு போதும்...... கோபம் மறக்கும் சண்டை போதும்.... சிரிப்பு மறக்காத குழந்தை போதும்..... சத்தம் குறையாத மணி போதும்..... வஞ்சகம் இல்லாத வார்த்தை போதும்..... கண்கள் மறக்காத இயற்கை போதும்..... காதுகள் மறக்காத இசை போதும்...... கால்கள் மறக்காத பாதை போதும்..... கலைய மறக்கும் கூடு போதும்...... வேஷம் இல்லாத நாடகம் போதும்..... நினைவுகள் மறக்கும் உள்ளம் போதும்..... கண்ண

நான் வேண்டிய வாழ்வு

ஒரு சிரு ஓடை போல் தொடங்கி நதியில் கலந்து  காடு,மலையெல்லாம் கடந்து, அவ்வப்போது காட்டாறு,வெள்ளம் என்றெல்லாம்  பெயர் எடுத்து...............                 என்னில் நனைய காத்திருந்த சிலருக்கு  அருவியாக மாறி......... பிடித்தாருக்கு ஏற்றார் போல் என்னை பிரித்து இடத்திற்க்கு ஒரு பெயர் சூட்டி. சிலருக்கு தாகம்  தீர்க்கவும், சிலரின் தாகம் தீர்க்கவும் நகர்ந்து எல்லாம் கலந்து போன கடலில் சேர்ந்து காணாமல் போகுமோ என் வாழ்வு............... கிடைத்ததை பங்கிட்டு , பிறர் இட்ட முட்டைக்கு தன் கூட்டில் அடைக்களம் தரும் காகமாக..... தூக்கம் மறந்து தான் படையுடன் தன்  தேடலை தொடங்கும் எறும்பாக....... மேற்பார்வையில் அழகினை கொட்டி பெறுக்கி பார்பவரை மயக்கி கவரும் மயிலின்  இறகை போல்............. கர்வத்தின் பெயர்பொருளாய் எல்லாம்  தனக்கு கீழ் தான் என உல்லாசமாக இவ்வுலகை  இரசித்து பறந்து கொண்டு இருக்கும்  பறவையாக........... தனக்கென தனி வாழ்வாதாரத்தை கொண்டு  கண்களை கொண்டு இவ்வுலகை கட்டிபோடும் மீனாக............. கலைப்பில் வந்த அவனை அனைத்துகொண்டு, அவன் வந்தது தன்னை வெட்டதான் என அறிந்தும்