நான் வேண்டிய வாழ்வு

ஒரு சிரு ஓடை போல் தொடங்கி நதியில் கலந்து 
காடு,மலையெல்லாம் கடந்து,
அவ்வப்போது காட்டாறு,வெள்ளம் என்றெல்லாம் 
பெயர் எடுத்து...............
               
என்னில் நனைய காத்திருந்த சிலருக்கு 
அருவியாக மாறி.........
பிடித்தாருக்கு ஏற்றார் போல் என்னை பிரித்து
இடத்திற்க்கு ஒரு பெயர் சூட்டி. சிலருக்கு தாகம் 
தீர்க்கவும், சிலரின் தாகம் தீர்க்கவும் நகர்ந்து
எல்லாம் கலந்து போன கடலில் சேர்ந்து
காணாமல் போகுமோ என் வாழ்வு...............


கிடைத்ததை பங்கிட்டு , பிறர் இட்ட முட்டைக்கு
தன் கூட்டில் அடைக்களம் தரும் காகமாக.....

தூக்கம் மறந்து தான் படையுடன் தன் 
தேடலை தொடங்கும் எறும்பாக.......

மேற்பார்வையில் அழகினை கொட்டி
பெறுக்கி பார்பவரை மயக்கி கவரும் மயிலின் 
இறகை போல்.............

கர்வத்தின் பெயர்பொருளாய் எல்லாம் 
தனக்கு கீழ் தான் என உல்லாசமாக இவ்வுலகை 
இரசித்து பறந்து கொண்டு இருக்கும் 
பறவையாக...........

தனக்கென தனி வாழ்வாதாரத்தை கொண்டு 
கண்களை கொண்டு இவ்வுலகை கட்டிபோடும்
மீனாக.............

கலைப்பில் வந்த அவனை அனைத்துகொண்டு,
அவன் வந்தது தன்னை வெட்டதான் என அறிந்தும்  
நிழல் தந்து அவனை தாழாட்டும் 
மரமாக.......................

முடியாத பட்சத்தில்............(தொடரும்)


                                                                                                              எழுதியதால்
                                                                                                                    நான்

Comments

Post a Comment

Popular posts from this blog

ரசிகன்❤️

என் முதல் மனிதி

செப்டம்பர் 7