கண்ணீர்

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று
நான் நினைத்தேன் வந்தாய் நீ............!
நடந்தது ஒன்று வந்தாய் நீ............!
எதிர்பார்த்தேன், ஏக்கம் கொண்டேன்,இழந்தேன்! 
இருந்தாய் நீ !!!

தனிமை,வெறுமை,வெறுப்பு !  
இருந்தாய் நீ!!!

வியப்பு ,மகிழ்ச்சி, கூடல் !  
இருந்தாய் நீ!!!

பிறப்பு,இறப்பு,இழப்பு !  
இருந்தாய் நீ!!!
காதல், துக்கம்,காற்று,மழை ! 
இருந்தாய் நீ!!!

வெற்றி,தோல்வி,கோபம்!!  
இருந்தாய் நீ!!!!

அவமானம், பாரம், வலி 
இருந்தாய் நீ!!!

சிலரிடம் நீ வடிந்தது கண்டு , நான் வடித்தேன்!!!!!!
களிப்பில் வடிந்தாய் உன்மேல் 
ஆசை கொண்டேண்.

கலங்கியதால் வடிந்தாய் உன்மேல் 
வெறுப்பு கொண்டேண்.

ஏமாறும் போதும் வந்தாய் ,ஏமாற்றும் போதும் வந்தாய்!!!
உன்னிடம் மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன் சுற்றி
இருப்பவர்களின் கண்ணில்.....  
ஒரு  நாளும் பார்த்துவிட கூடாது
உன்னை கலங்கிய நிலையில்😭😢

              அழுததனால் நான்
                  கா.ராஜ சேகர்

Comments

Post a Comment

Popular posts from this blog

ரசிகன்❤️

நான் வேண்டிய வாழ்வு - 2