உறவோடு உறவாடு
காக்கை அறியுமோ அது கருங்குயிலின் முட்டை
என்று,தன்னின் முட்டை என்றே அடைகாத்து
பொறிக்கும் அதுவே உறவு......
அந்த மழை மேகமும் ஆனந்தமாய் கண்ணீர்
வடித்தது அந்த பந்தகளின் பாச இணைவை
கண்டு ....
நிழலும் பிரியும் என்பான் மூடன்,நிழல் மறையும்
என்னை விட்டு ஒருநாளும் விலகாது..மறையும்போது
பாம்போ கீரியோ நாங்கள்,விலகாமல்
ஒருகூட்டு பறவையாய் நாங்கள்
என் உடன் பிறந்தவர்கள்💛
நான் பார்த்த என் மூத்த தலைமுறையின்
ஒரு ஆசை முத்தம் போதும்,பூந்தேனின் சுவையை
வண்டு அறியுமோ நான் அறிவேன்.....
அத்தையோ அவள் எனக்கு ஒரு நாளும் விடாமல்
என் பெயரை அழைக்க, மழை நின்ற பின் மழை
துளி சொட்டுமோ அது சொட்டும் அவளின் அன்பை
கண்டு......!
மாமனோ அவன் மாமன் தோழுக்கு தோழாய் துணை
நிற்ப்பவன், என் தந்தை அவன் சுடும் போடு உன்
மடியல்லவா என்னை குளிர செய்தன.....!
அப்பனோ அவன் அப்பன் என் சித்தப்பன்
என்னை மெருகேற்றி வளர்த்தவன்,உன் துணையின்றி
நான் பிழைத்திருப்பேனோ புரிதலுடன்....!
அம்மாவோ அவள் அம்மா என் சின்னம்மா
உணவிற்க்கோ, ஊக்கத்திற்க்கோ வந்ததில்லை
பஞ்சம் உன்னிடம்...!
பிறிவொன்று நேருமோ மாறாது அது மறையாது
என்றும், எங்கள் வீட்டு முற்ற்ம் சொல்லும்
நாங்கள் வாழ்ந்த கதையை💒💒💒
Comments
Post a Comment